பிரதான செய்திகள்

நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு

தலவத்துகொடையில் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் நகைக் கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நகைக் கடையொன்றினுள் திடீரெனப் புகுந்த மர்ம நபர்கள், தம் வசமிருந்த துப்பாக்கிகளைக் காட்டி கடை உரிமையாளரை அச்சுறுத்தினர்.

எனினும், சுதாகரித்துக்கொண்ட கடை உரிமையாளர், தன் வசமிருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மர்ம நபர்களை எதிர்த்து மல்லுக்கட்டினார்.

இதையடுத்து, மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால், கடை உரிமையாளர் காயமடைந்தார். காயமடைந்த அவரை அப்படியே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

காயப்பட்ட கடை உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தலவத்துகொடை பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment