( எப்.முபாரக் )
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
அந்த வகையில் இன்று புதன்கிழமை (29) காலை தோப்பூரில் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் தோப்பூர் றோயல் ஜூனியர்ஸ் பாடசாலை வளாகத்திலிருந்த வாகை மரமொன்று சாய்ந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மரத்தின் கீழ் சிக்குண்டு சேதமடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.அனஸ் தெரிவித்தார்.



0 comments:
Post a Comment