(எப்.முபாரக்)
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்லுமாறும் இடமாற்றங்களை பெற்றுத்தருமாறு கோரி வர வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மக்கள சந்திப்பு இன்று (29) கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை பின்னடைந்து காணப்படுவதை நான் விரும்பவில்லை. கிழக்கு மாகாண கல்வி அமைச்சும்,கல்வி திணைக்களமும் ஆசிரியர் பற்றாக்குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகளை தெரிவு செய்தே புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கியிருப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் குறிப்பிட்டார்.
பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று கிராமப்புர மக்களையும்,கிழக்கு மாகாணத்தையும் கல்வியில் முன்னேற்றமடையச்செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுனர் என்ற வகையில் என்னை சந்திப்பதற்கு உங்களுக்கு உரிமைகள் இருந்த போதிலும் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் இடமாற்றம் பெற்றுத்தருமாறும் .பாடசாலைகளை மாற்றி தங்களுக்கு இலகுவான இடத்தை வழங்குமாறு கோரியும் வர வேண்டாம் எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

0 comments:
Post a Comment