(எப்.முபாரக்)
புல்மோட்டை மற்றும் பதவி ஸ்ரீ புர பொலிஸ் பிரிவால் கிராமத்திற்கு பொலிஸ் என்ற தலைப்பில் பொலிஸாரும் மக்களும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து செயல்படவுள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் இன்று(29) மாலை புல்மோட்டை பொது சந்தை கட்டிட தொகுதியில் இடம்பெற்றது .
இதன் பொலிஸ் சேவையின் மகத்துவம் அர்ப்பணிப்பு மற்றும் பொலிஸாரின் கடமைகள் தொடர்பாகவூம் தெளிவுபடுத்தப்பட்டது. அத்தோடு கிழக்கு மாகாணத்தில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியும் இதன் போது தெளிவுபத்தப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேரா, திருகோணமலை மாவட்ட பொலிஸ் மா அதிபர்,திருகோணமலை தொகுதி பொலிஸ் அத்தியட்சகர்,குச்சவெளிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர்,மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், ஆர்.எம்.அன்வர்,முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் தௌபீக், குச்சவெளி பிரதேச செயலாளர் புல்மோட்டை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளான பலில்,சுதர்தீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment