பிரதான செய்திகள்

இந்திய - இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி ஆரம்பம்

இந்திய மற்றும் இலங்கை படையினர் இணைந்து நடத்தி வரும் வருடாந்த கூட்டுப் பயிற்சியான ´மித்ரா சக்தி 2017´ இன்று (13) பூனேயில் ஆரம்பாகியுள்ளது. 

இரு நாட்டு படைகளும் பூனே நகரில் உள்ள ஹூந்த் ராணுவ முகாமில் தமது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன. 

இலங்கை உட்பட தெற்காசிய பிராந்தியத்திலும், இந்து சமுத்திரத்திரத்திலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை அடுத்து இலங்கையுடன் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மித்ரா சக்தி என்ற கூட்டு ராணுவ பயிற்சி நடவடிக்கையை இந்திய படையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த பயிற்சிகளின் ஊடாக இருநாட்டு படையிர் மத்தியிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ விதிமுறைகளை கட்டியெழுப்பவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் கிட்டும் என இருநாட்டு ராணுவத்தினரும் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர். 

பெரும்பாலும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணியில் அங்கம் வகிக்கும் இந்திய - இலங்கை ராணுவத்தினருக்கு தமது தரங்களை மேம்படுத்திக் கொள்வதை அடிப்படையாக கொண்டும் இந்த கூட்டுப் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அத்துடன் இறுதி நாளான எதிர்வரும் 27 ஆம் திகதி இரு நாட்டு ராணுவங்களின் உயர் நிலைத் தளபதிகள் ஹூந்த் படைத்தளத்தில் பிரசன்னமாவார்கள் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment