பிரதான செய்திகள்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நிஸங்க நியமனம்

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸங்க நாணயக்காரவை நியமித்துள்ளதாக அரச பொது நிறுவனங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவினால், நிஸங்க நாணயக்காரவிற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 

தாய்வான் வங்கி ஒன்றில் பலகோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சலீல முணசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நிறுவனத்தின் தலைவராக நிஸங்க நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment