சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 8 லட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு அதிகம் பெறுமதியுடைய 88 சிகரெட் பக்கற்றுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குவைத் நாட்டில் இருந்து வந்த இவர்களின் பயணப் பையில் இருந்து இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளை சுங்கப்பிரிவினர் கையகப்படுத்தியதுடன், குறித்த இருவருக்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment