திவுலபிட்டிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் திவுலப்பிட்டிய - கேன்பிடகெதர பகுதியில் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோ உட்பட 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களும் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment