பிரதான செய்திகள்

ஆங்கில பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(ஹைதர் அலி)

நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாதகால ஆங்கில பயிற்சி நெறி அமெரிக்க ஒன்றியத்தின் அனுசரணையில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின்  ஏற்பாட்டில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் கலந்துகொண்டு பாட நெறியை பூர்த்தி செய்து பரீட்சையில் பங்குபற்றிய  ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (24) கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் தவிசாளர் திரு குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடக, கலாச்சார பணிப்பாளர் ஜின் றூசோ கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.

நாடளாவிய ரீதியில் கெளரவிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஐந்து ஊடகவியலாளர் கெளரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஒரேயொரு முஸ்லிம் நபர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் ஊடகப்பிரிவினைச் சேர்ந்த காத்தான்குடி முஹம்மது ஸஜீத் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment