லிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் பணம், இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், இவர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இவர்களை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment