ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகாமுள்ள பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவினால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் நோட்டன் பிரிட்ஜ் கலுகல லக்ஷபான வழியாக போக்குவரத்து இடம்பெற்றது.
பின்னர் கினிகத்தேனை பொலிஸாரும் பாதை அபிவிருத்தி அதிகாரசபையினரும் இணைந்து மண்சரிவை அகற்றியபின் காலை 6.30 மணியளவில் போக்குவரத்து சற்று சீராகியுள்ளது.
மேலும் குறித்த வீதியில் ஒரு ஒழுங்கையில் மாத்திரம் போக்குவரத்து தற்போது இடம்பெற்று வருவதாகவும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment