பிரதான செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி கொலை

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநலப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கைதியொருவர், அதே பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கைதியொருவரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொஹமட் அபூபக்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது மரண பரிசோதனைகளை நடத்துவதற்கு உறவினர்கள் எவரும் சமுகமளிக்கவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சடலத்தை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு, பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில் 011 2696950 அல்லது 0777 264299 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment