(எஸ்.அஷ்ரப்கான்)
ஆய்வுக்கும் உரையாடலுக்குமான மத்திய நிலையத்தின் (CDR) ஏற்பாட்டில் ‘அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களின் நிலையும்’ எனும் தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல், கணக்காளர் எம்.எச்.எம்.ஹனான் தலைமையில் நாளை (26) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு வை.எம்.எம்.ஏ. தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளனர்.

0 comments:
Post a Comment