பிரதான செய்திகள்

“இயற்கையின் பக்கம் வாருங்கள்” செயற்கையின் பக்கம் சென்றால் உயிராபத்து: டாக்டர் எம்.பி றிஷாட்

(பைஷல் இஸ்மாயில்)

கடந்த 60 ஆண்டுகாலமாக 75 சதவீதமானவர்கள் தொற்றா நோயினாலும், 15 சதவீதமானவர்கள் தொற்று நோயினாலும், 10 சதவீதமானவர்கள் விபத்து மூலமும் பாதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது என பாரம்பரிய வைத்தியத்துறைக்கான தேசிய நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் வைத்தியர் எம்.பி.றிஷாட் தெரிவித்தார்.

நிந்தவூர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரின் வேண்டுகோளின் பேரில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் மங்கள கருணாதிலகவின் ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய வைத்தியத்துறைக்கான தேசிய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி.எ.ஆர்.தேவபிரியவின் அறிவுறுத்தல்களுக்கமைவாக கடந்த 5 நாட்டகளாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தாய் சேய் போசணை நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வின்போது அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

60 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சந்ததியினர் உணவைத்தான் மருந்தாக உட்கொண்டார்கள். இப்போதுள்ள சந்ததியினர் வாழ்நாள் முழுவதும் மருந்தை உணவாக உட்கொள்ளும் சந்ததியினராக மாறியுள்ளனர். இந்நிலைமை தொடர்ந்தும் செல்லுமானால் எமது வருங்கால இளம் சந்ததியினரை நாம் இளம் வயதிலே இழக்க நேரிடும். இதை நாம் பாதுக்காக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. 

இதற்கான வேலைத்திட்டங்களை சுகாதார அமைச்சும், சுகாதார திணைக்களங்களும் இணைந்து தேசிய ரீதியாக முன்னெடுத்து வருகின்றன. அதற்காக பல கோடிக் கணக்கான நிதிகளை அரசு செலவு செய்து வருகின்றது.

“வரும் முன் காப்போம்” தொற்றா நோய்க்கு மருந்தே இல்லை என்றும் உலக சுகாதார திணைக்களம் கூறுகின்றது. இந்த நோயினை நாமே நாம்  கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக எமது அன்றான உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பதனால் நாம் இந்த நோயிலிருந்து பாதுகாப்புப் பெற்று எமது இளம் சந்ததியினரையும் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் எமது உடலுக்கு நன்மைகள் கிடைக்வேண்டும் என்றால் “இயற்கையின் பக்கம் வாருங்கள்” “செயற்கையின் பக்கம் சென்றால் அது எமக்கும் உயிராபத்தை உண்டாக்கும் இதேவேளை எமது சந்ததியிரையும் ஒரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வவித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமே இல்லை என்றார்.   

இந்நிகழ்வில் நிந்தவூர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர், வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, எம்.பி.எம்.றஜீஸ், எம்.ஜே.எம்.ஹஸான், எம்.ஏ.ஹறூஸ், பஸ்மினா அறூஸ் உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment