பிரதான செய்திகள்

தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது: ஜனாதிபதி

ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சுயலாபத்துக்காக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (19) முற்பகல் கொழும்பிலுள்ள நூலக ஆவணமாக்கல் சபையில் நடைபெற்ற சிரேஷ்ட  ஊடகவியலாளரான அமரர் டி.பி.தனபாலவின் நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வளவு தவறிழைத்தாலும் அவர்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பதும், எவ்வளவு சரியானதாக இருந்தாலும் சிலரை இலக்கு வைத்து தாக்குவதையும் இன்று ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்காக சரியான, தரமான, பெறுமதியானவற்றை சமூகத்துக்கு வழங்குவது அடுத்த சந்ததிக்காக ஊடகவியலாளர்கள் தமது பேனா முனையினால் ஆற்ற வேண்டிய பணியாகும் எனவும் குறிப்பிட்டார்.

முன்மாதிரியான பத்திரிகையாளர் டி.பி.தனபாலவின் சமூக செயற்பாடுகளை ஜனாதிபதி அதன் போது பாராட்டினார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment