பிரதான செய்திகள்

புகையிரத வீதிகளில் செல்பி எடுத்த 24 பேர் உயிரிழப்பு

இவ்வருடம் கடந்த 09 மாத காலப்பகுதியில் புகையிரதம் மற்றும் புகையிரத பாதைகளில் செல்பி எடுக்க முயற்சித்து 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. 

புகையிரதங்களினால் இடம்பெறுகின்ற விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், 2016ஆம் ஆண்டில், புகையிரத வீதிகளின் ஊடாக பயணிப்பதன் காரணமாக புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட 436 விபத்துக்களில் 180பேர் உயிரிழந்துள்ளதுடன், 256 பேர் காயமடைந்துள்ளதாக அந்த சபை கூறியுள்ளது. 

அதேவேளை புகையிரத குறுக்கு வீதிகளில் புகையிரதங்களுடன் வாகனங்கள் மோதி 84 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டில் புகையிரதத்தில் பயணிக்கும் போது புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்து 76பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுபோன்ற புகையிரத விபத்துக்களை குறைப்பதற்காக புகையிரத வீதிகளுக்கு அருகில் வசிக்கின்ற மக்களை தௌிவூட்டுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment