ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் முப்பெருவிழா இன்று (19) பாடசாலை அதிபர் யூ.எல். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ். சுபையிரின் 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களும் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ். சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது . இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment