மெட்ரோபொலிடன் கல்லூரி மலேசிய லின்கொலன் பல்கலைக்கழக கல்லூரியில் உளவியலில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டது.
மெட்ரோபொலிடன் கல்லூரின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் மற்றும் கல்லூரியின் கல்வி நடவடிக்கைளுக்கான பொறுப்பான மஹ்தி சஹீட் ,தொலிநுட்ப பிரிவுக்கு பொறுப்பான மதுக்க ஆகியோர் கலந்து கொண்டனர். மெட்ரோபொலிடன் கல்லூரியின் உறுப்பினர்கள் மூன்று நாள் பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டனர்.
மலேசிய லின்கொலன் பல்கலைக்கழக கல்லூரியின் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. பல்கலைக்கழக கல்லூரியின் உப வேந்தர் கலாநிதி அமியா பகாமிக் மற்றும் பல்கலைக்கழக விசேட பிரதிநிதி கலாநிதி லுப்னா அக்கல்லூரியின் போராசிரியர் ஹாஜி மன்சூர் மற்றும் அக்கலூரியின் திணைக்கள தலைவர்கள் மற்றும் பட்டப்பின் படிப்பு திணைக்கள அதிகாரிகளையும் மெட்ரோபொலிடன் கல்லுரியின் அதிகாரிகள் சந்தித்தனர்.
இலங்கையில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான மெட்ரோபொலிடன் கல்லூரி மலேசிய லின்கொலன் பல்கலைக்கழக கல்லூரியுடன் உளவியலில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ள முதலாவது கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment