பொலிஸ் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் போது, அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தம், நவம்பர் மாதம் 5ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இலங்கையிலிருந்து, இலங்கை விண்ணப்பத்துக்குத் தபாலில் அனுப்பிவைப்பதற்கு 1,000 ரூபாய் அறவிடப்படும். இலங்கையிலிருந்து வெளிநாட்டு விலாசத்துக்கு அனுப்பிவைப்பதற்கு, 1,500 ரூபாய் அறவிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து இணையத்தளத்தின் ஊடாக அனுப்பிவைப்பதற்கு 1,500 ரூபாய் அறவிடப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment