பிரதான செய்திகள்

புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்: அமைச்சர் ராஜித

புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகளென சுகாதரார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடு துண்டாடப்படுவதை தடுக்க பல காப்பீடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை பிளவு படுத்தும் யாப்பு உருவாக்கப்படுவதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டாதாவது.

ஜே.ஆர் ஜெயவர்தன பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டு வந்தார். தமது ஆட்சியில் அதனை ரத்து செய்வதாக சிறிமாவோ பண்டாரநாயக்க அறிவித்தார்.

நான் எந்த தலைவருடன் இருந்தாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்த்தேன்.18 ஆவது திருத்தத்திற்கு கை உயர்த்தி பாவம் செய்து கொண்டேன். சந்திரிகா குமாரதுங்கவும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்களித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். எவரும் அதனை செய்யவில்லை. வரலாறு முழுவதும் பிக்குமார் முறையற்ற விதத்தில் புதிய யாப்பு முயற்சிகளின் போது தலையீடு செய்துள்ளனர்.

இதனை எதிர்ப்பவர்களுக்கு எதிர்காலத்தில் வெட்கப்பட நேரிடும். சோபித தேரரின் இறுதிக் கிரியையில் பங்பேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலத்தினுள் இதனை ஒழிப்பதாக உறுதியளித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment