புங்குடுதீவு தாயகம், சொக்கலிங்கம் அக்கெடமியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் பிரதேச மாற்றுத் திறனாளிகள் முதலானோரை தாயகம் சமூக சேவை அகமானது அமரர் கந்தையா தனபாலன் ஞாபகார்த்தமாக, அவரது குடும்பத்தினரால் கௌரவிக்கும் விழா எதிர்வரும் 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் அமைப்பின் தலைவி த.சுலோஜனா தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேபோல் புலமைப் பரிசில் பரீடசையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவி செல்வி. விஜயகுமாரசர்மா ஐஸ்வர்யாவுக்கு "சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், "பணமுடிப்பு" வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

0 comments:
Post a Comment