ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் "ஹட்டன் பூல்பேங்க் தொழிற் பயிற்சி நிலையமாக" மாற்றப்பட்டதற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் நேற்று முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்ததுடன், கடந்த 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இந்த பயிற்சி நிலையத்தின் பெயரில் இருந்த தொண்டமானின் பெயர் அகற்றப்பட்டமை குறித்து மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதேவேளை ஏற்கனவே தொண்டமான் நிதியத்தின் கீழ் இயங்கிய ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கு, றம்பொட தெண்டமான் கலசார நிலையம் மற்றும் பிரஜாசக்தி செயற்திட்டம் ஆகியன மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்து இந்த நான்கு நிறுவனங்களும் "பிரஜா சக்தி கண்காணிப்பு பிரிவின்" கீழ் இயக்கப்படுவதாக கூறினார்.
இந்நிலையில் முன்னதாக தொண்டமான் நிதியத்தின் கீழ் இயங்கி வந்த "நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கு" மற்றும் "றம்பொட தெண்டமான் கலசார நிலையம்" ஆகியவற்றின் பெயர்களில் இருந்த தொண்டமான் என்ற வாசம் அகற்றப்பட்டு "நோர்வூட் விளையாட்டரங்கு" மற்றும் "றம்பொட கலசார நிலையம்" என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
தொண்டமான் நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் காரணமாக இவற்றை, தொடர்ந்து தொண்டமான் நிதியத்தின் கீழ் இயக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை தனிப்பட்டவர்களின் பெயரில் நடத்திச் செல்வதில் சிக்கல் நிலவுவதாகவும் அமைச்சின் அதிகாரி கூறினர்.

0 comments:
Post a Comment