பிரதான செய்திகள்

“முதியவர்கள் விலை மதிக்க முடியாத சொத்துக்கள்”- மனூஸ் அபூபக்கர்

முதியவர்கள் நாம் வாழும் காலத்தின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் எனவும் முதியவர்கள் அவர்களின் பொன்னான வாழ்வியல் அனுபவங்களை நமது வளரிளம் பருவத்தினருக்கு அள்ளிச் சொறிவார்கள். நமது இளைய தலை முறை வழி தவறி நெறி கெட்டு போகாமல் வேளியாக இம் மூத்தவர்கள் இருப்பபார்கள் எனவும் உள வளத்துணையாளர் மனூஸ் அபூபக்கர்  தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பிரிவு ஏற்பாடு செய்த முதியோர் தின நிகழ்வு கோணாவத்தை பல் தேவைக் கட்டிடத்தில நேற்று (10) இடம்பெற்றது. இதன்போது  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

ஆண்டு தோறும் ஒக்டோபர் முதலாம் திகதி உலகமெங்கும் சர்வதேச முதியோர், சிறுவர் தினம் என்பன கொண்டாடப்படுகிறது. இவ் வருடம் “முதியவர்களின் திறமை, பங்களிப்பு மற்றும் பங்குபற்றுதலுடனான எதிர்காலத்தை நோக்கி கால் பதிப்போம்” எனும் தொனிப் பொருளில் முதியவர்கள் சமூக மாற்றத்தின், முன்னேற்றத்தின் தவிர்க்க முடியாத அங்கம் அவர்களின் அறிவு, திறமை மற்றும் அனுபவத்தினை இளைய சமூகம் தெவிட்டாது பெற்றுகொள்ள வேண்டுமென்பதை அவ்வாண்டின் தொணிப் பொருள் உணர்த்துகிறது.

நமது நாட்டின் மொத்த சனத் தொகையில் 30 இலட்சம் பேர் (14.6மூ) முதியவாக்ளாக இருக்கிறார்கள்.  இத் தொகை 2048 ஆகும் போது 24.8மூ ஆக உயருமென இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது. அதில் 3மூ ஆன வயோதிபர்கள் முதியோர் இல்லங்களில் வாழுகிறார்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில் 302 முதியோர் இல்லங்களில் 6000 முதியோர் இருப்பதாக தேசிய முதியோர் செயலகம் குறிப்பிடுகிறது. 

நமது பிரதேசத்தில் 99 வீதமான முதியவர்கள் குடும்பத்துடன் தான் இணைந்து வாழுகிறார்கள். நமது இல்லங்கள் அவர்கள் வாழுவதற்கான உகந்த சூழலைக் கொண்டுள்ளது. அவர்களது சுகாதாரம், வாழ்விடம் மற்றும் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவது போன்று உன்னதமான உளநலத்திலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். 

அவர்களை மதித்து, அவர்களது கருத்துக்கு இடமளித்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற போது முதியவர்கள் அவர்களின் பொன்னான வாழ்வியல் அனுபவங்களை நமது வளரிளம் பருவத்தினருக்கு அள்ளிச் சொறிவார்கள். நமது இளைய தலை முறை வழி தவறி நெறி கெட்டு போகாமல் வேளியாக இம் மூத்தவர்கள் இருப்பபார்கள் என குறிப்பிட்டார்.

முதியயோரை போசிப்பதற்காக சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு அடுத்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் 174 பகுதி நேர பகல் பராமரிப்பு நிலையங்களை அமைக்க உத்தேசித்துள்ளது. அங்கு வயோதிபர்கள் பகல் வேளைகளில் வந்து இளைப்பாற முடியும். 

மட்டுமல்லாது பத்திரிகைகள், நூல்களை வாசிப்பதற்கான ஏற்பாடுகள் அங்கு உண்டு. மேலும் உடற்பயிற்சி வசதிகள், தேனீர், சிற்றுண்டி வசதிகள், அவர்களது சக்கரை, அரத்த அழுத்தம், கொலோஸ்ரோல் போன்றவற்றை பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் என்பனவும் செய்யப்படும். 

அல்லாஹ் அல் குர்ஆனில் “… அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை சீ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக” (17:23) 

என்று குறிப்பிடுவது பெற்றோரை எவ்வளவு கண்ணியம் கொடுத்து கவனிக்க வேண்டும் என்பதனை திருமறை நமக்கு கூறுவதை நாம் உள்ளத்திற்கு எடுத்தால் எந்த வயோதிப இல்லங்களும் நமது சமூகத்தில் தோன்றாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment