பிரதான செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ, டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர ஆகிய 3 பாராளுமன்ற  உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் உபாலி    கெடிகார , சம்பத் அதுகோரல மற்றும் அஜித் பிரசன்ன ஆகிய 3 மகாண சபை உறுப்பினர்களையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆறு பேரும் இன்று (10) மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment