புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம்' எனும் தொனிப்பொருளிலான தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனம் இன்று (29) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய காங்கிரசின் பாலமுனை மத்தியகுழு தலைவரும், அதிபருமான கே.எல்.உபைதுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்துகொண்டு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவோம் எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்.
இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உட்பட தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்பிரகடன நிகழ்வில் கட்சியின் ஆதரவாலர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று அக்கட்சியில் இணைந்துகொண்டார்.
இதன்போது தேசிய காங்கிரசின் பாலமுனை பிரகடனத்தை கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் வெளியிட்டார்.
தேசிய காங்கிரசின் பாலமுனைப் பிரகடனம்
அவை நமக்கு தொடர் துயரங்களையே தந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும் இன சமத்துவம் அதிகாரப் பகிர்வு போன்றவைகள் வழங்குவதாக மக்களிடம் வாக்;குப்பெற்ற நல்லாட்சி- குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவுள்ள பாரளுமன்றம், அரசியல் அமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதற்கென நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழு 2017 செப்டம்பர் 21ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கை மூன்று இனங்களும் மனம் ஒருமித்து சேர்ந்து பேசாமல் முன்மொழியப்பட்டுள்ளதால் நமது நாட்டில் வாழும்; மூவின மக்களும் எப்போதும் சந்தோசமாக ஒனறுபட்டு வாழ வழிசெய்துள்ளதாக எந்தப் பிரஜையாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
இந்நிலையில்
இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மக்களின் இறைமை என்பவற்றில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாலும்
ஜனாதிபதியை நேரடியாகத் தமது வாக்குகளின் மூலம் தெரிவுசெய்வதற்கான மக்களின் உரிமை இல்லாதொழிக்கப்பட்டு நாட்டின் தலைவர் மக்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கவேண்டும் என்ற நிலைமை மாற்றப்பட்டு நாட்டில் சுயாதீனமான தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் உருவாக்கப்படுவதாலும்
ஓற்றையாட்சி என்பது மாற்றப்பட்டு ஒருமித்;த நாடு என்ற பெயரில் சமஷ்டி அதிகாரம் வழங்க மறைசூழ்ச்சி செய்யப்படுவதாலும்
வெளிச் சக்திகளின் நவ காலணித்துவத்திற்கு சாதகமான தன்மைகளைக் கொண்டுள்ளதாலும்
புறச்சக்திகளின் தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்களுக்குள்ளாகி முன்வைக்கப்படுகிறது என்பதாலும்
சுதேச மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யவில்லை என்பதாலும்
விகிதாசார தேர்தல் முiறையை மாற்றியமைப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமானது என்பதாலும்
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கமுற்படுவதாலும்
இந்தியாவின் அழுத்தத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை நமது நாட்டில் தோல்வியுற்றிருப்பதை நாம் உணர்வதாலும்
இந்நாட்டில் வாழும் எல்லா மக்களும் எப்போதும் சுதந்திரமாக அன்பு பரிமாற்றங்களுடன் வாழவேண்டும் என நாம் விரும்புவதாலும்
தீர்மானம்-01
தேசிய காங்;கிரசின் இம்மக்கள் பேரணி அரசியலமைப்;பு நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கத் தீர்மானிக்கிறது.
தீர்மானம்-02
ஆதலால் அரசாங்கத்தினால் இடைக்கால அறிக்கை மீளப்பெறப்படவேண்டும் எனவும் அது எவ்வழியிலும் சட்டமாக்கப்படக்கூடாது எனவும் தேசிய காங்கிரசின் இம்மக்கள் பேரணி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான அரசியல் முறைமை ஒன்றை கருத்தில்கொண்டு நமது நாட்டின்; மூவினத்தினதும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கலந்துபேசி தற்போதைய நமது அரசியல் யாப்பில்; சில திருத்தங்களை மாத்திரம் செய்து அதனை சாத்தியப்படுத்த முடியும் என இப்பேரணி எடுத்தியம்புகிறது.
தீர்மானம்-03
புதிய திருத்தங்களாக பின்வரும் விடயங்களும் பரிசீலிக்கப்படவேண்டும் என இப்பேரணி முன்மொழிகிறது
1. இன மத மொழி நல்லிணக்கம் தொடர்பான விஷேட ஏற்பாடுகள்
2. சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான எச்செய்கைகளும் பாரபட்சமாக கருதப்படலாகாது
3. சிறுபான்மை மக்களுக்கு ஆகக் குறைந்தது மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலான காணி உள்;ளிட்ட வளப் பகிர்வு
4. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற தற்போதைய ஏறற்பாடுகளுக்கு மேலதிகமாக சகல நிர்வாக மட்டங்களிலுமுள்ள இன மத மொழி பரம்பல் விகிதாசரத்திற்கு அமைவாக அங்குள்ள பெரும்பான்மைக்கு அவ்வந்த மட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுதல்
5. இனங்களுக்கிடையிலான குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள்
6. சட்டங்களின் நீதிமுறை மீளாய்வு
7. பொதுநல அக்கறை வழக்காடலுரிமை
8. மாகாண சபை முறைமை நீக்கம்
9. அதிகாரம் மக்களுக்கு அருகில் கொண்டுவரப்பட்டு உள்ளுராட்சி அதிகார சபைகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் காணி சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் உள்ளுராட்சி அதிகார சபைகளின் இணக்கங்களோடு அமுல்படுத்தப்படுவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குதல்.
10. சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் பெறப்படாமல் மாற்றப்படக்கூடாது.
தீர்மானம்-04
மேலே சொல்லப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக எமது மக்களின் உடனடி பிரச்சினையாகவுள்ள புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்ற முறைமைக்கு புறம்;பாக நிறைவேற்றப்பட்டதாலும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லையாதலாலும் அந்த சட்டத்தை அரசு இரத்துச்வேண்டும் எனவும் இம்மக்கள்பேரணி அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
தீர்மானம்-05
சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றபிரதிநிதிகள் மேற்சொன்ன நான்கு தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக செயற்படவேண்டும் என இம்மக்கள் பேரணி அவர்களை வலியுறுத்துகிறது.
இப்பிரகடனம் 2017.10.29ம்; திகதி ஞாயிற்றுக்கிழமை பிpற்கல் வேளையில் அம்;hரை மாவட்டம் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஒன்றுசேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களினால் ஒருமித்து அங்கீகரிக்கப்பட்டு ஏகோபித்து நிறைவேற்றப்பட்டதாகும்.

0 comments:
Post a Comment