910 கிராம் மாவா போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் விஷேட அதிரடி படையினரால் கைதுசெய்யபட்டுள்ள சம்பவம் ஒன்று நோர்வூட் பகுதியில் இன்று (17) செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மலையக பிரதேசத்திற்கு வருக்கின்ற இளைஞர்களை இலக்குவைத்து இந்த மாவா போதை பொருள் விற்பனை செயய்படுவதாக பொலிஸ் விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து நோர்வூட் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரபட்ட மாவா போதை பொருள் தொடர்பான தகவல் தலவாகலை விஷேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே, கைதுசெய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாகலை பொலிசார், பொலிஸ் விஷேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிசார் விஷேட அதிரடி படையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment