பிரதான செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்: போக்குவரத்து பிரதி அமைச்சர்

வழக்கமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற பருவகாலச் சீட்டு (சீசன்) இருப்பவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க கூறினார். 

அதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுகின்ற அதுசொகுசு பஸ்களிலும் பயணிகள் பயணம் மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

நேற்று இரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பிரதியமைச்சரிடம் வினவிய போதே பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இதனைக் கூறினார். 

புகையிரத சேவை நிறுத்தத்தால் பயணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தடுப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment