2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு கண்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஐரோப்பிய நாடுகள் இடையிலான தகுதி சுற்றில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐஸ்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் கொசோவா அணியை வீழ்த்தியது.
அந்த அணித் தரப்பில் சிகுர்ட்ஸன், ஜோஹான் பெர்க் குட்மண்ட்ஸன் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியால் வெறும் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடான ஐஸ்லாந்து உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றது

0 comments:
Post a Comment