கடற்படைத் தளபதியாக குறுகிய காலம் பதவி வகித்த ட்ரவிஸ் சின்னையாவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
முப்பத்தைந்து வருட காலம் கடற்படையில் சேவை புரிந்த ட்ரவிஸ் சின்னையா இரண்டு மாதங்களுக்கு முன் தளபதியாக நியமிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை அலங்கரித்த முதல் முறை இதுவே ஆகும்.
அன்றிலிருந்து ஒரு மாத காலமே அவர் பதவி வகிக்கவேண்டியிருந்தது. அப்போது, அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதமாக அதிகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதையடுத்து, மேலும் ஒரு மாதம் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகவே தொடர்ந்தார்.
இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. மேலும், ட்ரவிஸ் சின்னையா கடற்படையில் இருந்து இன்றுடன் (26) ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, அவருக்கு அட்மிரலாகப் பதவியுயர்வு அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது இலங்கை அரசு.
கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

0 comments:
Post a Comment