கணவனுக்கும் மனைவிக்கும் இடை யில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் முற்றி மோதலாக மாறியதில் ஆத்திரமடைந்த கணவன் கத்தியொன்றினைஎடுத்து, மனைவியின் இரு கைகளையும் வெட்டி வீழ்த்திய சம்பவமொன்று நேற்று ஊவா பரணகமை யில் இடம்பெற்றுள்ளது.
வீழ்த்தப்பட்ட இரு கைகளுடன் மனைவி, நுவரெலியா அரசினர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் ஊவா -பர ணகமைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலி ஸார் பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதுடன், கைகளைத் துண்டிக்க பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றியுள்ளனர்.
ஊவா-பரணகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.எம். ஜனக்கபி ரிய தலைமையிலான குழுவினர், மேற் படி சம்பவம் குறித்து தீவிர விசாரணை களில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment