கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்காலை சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரைச் சந்தித்தனர்.
அம்பாந்தோட்டையில், நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, டலஸ் அலஹப்பெரும, சி.பி.ரத்னாயக்க, ஜனக்க வக்கும்புர, காஞ்சன விஜேசேகர ஆகியோர் தங்காலை சிறைச்சாலைக்கு இன்று (11) சென்றிருந்தனர்.
அங்கு அவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேரிடமும் நலம் விசாரித்தனர்.

0 comments:
Post a Comment