பிரதான செய்திகள்

புகையிரத சாரதிகள் திடீர் பணி புறக்கணிப்பு

கொழும்பு புறக்கோட்டை மற்றும் மருதானையில் ஆரம்பமாகும் புகையிரத சேவைகள் திடீரென இரத்து செய்யபட்டுள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் திடீர் பணி புறக்கணிப்பு காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில்  உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்து இந்த பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு புறக்கோட்டை நிலையம் மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் தங்களது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக வந்த பயணிகள் திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ள பணி புறக்கணிப்பை அடுத்து, அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருதானை மற்றும் புறக்கோட்டை புகையிரத நிலையங்களுக்கு பொலிசார் விரைந்துள்ளனர். இதேவேளை தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தாங்கள் போராட்டத்தை தொடரப்போவதாக புகையிரத தொழிற் சங்கம் அறிவித்துள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment