(எப்.முபாரக்)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.எல்.எம்.ஹாசீம் என்பவருக்கு, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளையின் செயலாளர் ஏ.எம்.ரஹீம் , பாராட்டி வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இவ் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தாங்கள் ஒரு ஆசிரியர் பணியை ஆரம்பித்து, இலங்கை கல்வி நிறுவாக சேவையில் ஒரு சிரேஷ்ட தரத்தை அடைந்து, கல்வி முதுமானி பட்டத்தையும் பெற்று, அட்டாளைச் சேனை, தர்ஹா டவுன் கல்வியற் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி, அதன் பின்னர் அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக (திட்டமிடல் பிரிவு) மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு கல்வி அபிவிருத்திப் பணியில் சிறப்பான பணியாற்றி எல்லோரினதும் நன்மதிப்பையும் பெற்றுள்ளீர்கள்.
இவ்வளவு அனுபவங்களைக் கொண்ட தாங்கள் மூதூர் கல்வி அபிவிருத்தியை உயர்ந்த தரத்திற்கு கொண்டு செல்ல எமது இஸ்லாமிய சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடன் இணைந்து செயற்பட பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம் எனவும் இவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment