(எப்.முபாரக்)
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத் துவக்கொன்றும் 45 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் கட்டுத் துவக்கொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் செவ்வாய்கிழமை (10) அவ்வீட்டினை சோதனைக்குட்படுத்திய போது கட்டுத்துவக்கும் வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் குச்சவெளி பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment