பிரதான செய்திகள்

இஸ்லாமிய தஃவா பணியில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

எமது சமூகத்திலுள்ள பெண்களுக்கு வெளி இடங்களுக்கு சென்று தஃவா நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றது. என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி சித்திக்கிய்யா பெண்கள் கலாசாலைக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளித்துவிட்டு உரையாற்றும்போதே ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இருப்பினும் இத்தகைய கல்லூரிகள் மூலமாக அவ்வாறான குறைகள் நீக்கப்பட்டு பெண்கள் மார்க்கக்கல்வியினை முறையான விதத்தில் கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களது திருமண வாழ்வுக்குப் பின்னர் பெண்கள் எந்தளவு தூரம் மார்க்கக் கல்வியினை கற்றுக்கொள்வதிலும் அதனை கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் செலுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

எனவே சமூகத்திலுள்ள அனைத்துப் பெண்களும் முறையான விதத்தில் மார்க்கக் கல்வியினை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென்பதோடு பெண்கள் தங்களால் முடியுமானவரை தஃவா பணிகளில் ஈடுபடவும் முன்வர வேண்டுமெனவும் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தனது உரையில் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment