நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா புதிய நகர மண்டபத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் இன்று (14) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்தில் மோட்டர் சைக்களில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தின் காரணமாக சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment