திம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடம் நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
பிற்பகல் பிரதேச சபை வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் அங்குள்ள பௌத்த நிலையத்திற்கு சென்று சமய கிரியைகளில் கலந்துகொண்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய பிரதேச சபைக் கட்டிடத்தை மக்களிடம் கையளித்தார்.
பிரதேச சபை வளாகத்தில் ஜனாதிபதி அவர்கள் நாக மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
சங்கைக்குரிய வில்லானே சிரியாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, வடமத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஜயந்த மாரசிங்க, என்.ஏ சம்பத், எச்.எம் அன்சார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







0 comments:
Post a Comment