பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பை நிராகரித்தார் சபீஸ்


அவதூறுகளுக்கும், காழ்புனற்சியின்  கொதிநிலையில் எழுதப்படும் உதிரி கட்டுரைகளுக்கும் எனது முன்னோர்கள் பதில் எழுதுவதிலிருந்து  தவிர்ந்து கொண்டதுபோன்று தவிர்ந்து கொள்ள பழகியவர்களில்  நானும் ஒருத்தன், இருந்தாலும்  ஒரு தவறினை  சுட்டிக்காட்டுவதற்கு எழுதவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது
.
எனது கட்சி தலைமை என்பது உயர்ந்த நாகரிக பண்புகளையும், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணிக்கக்கூடிய வல்லமையையும், யாரும் நடந்திராத பாதைகளில் பயனிக்கக்கூடியதுமான திறமைகளையும் கொண்டது, அவரது பாசறையில் வளர்ந்தவன் நான்.  அதனால் முறையான அபிவிருத்திகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற சிந்தனையும், கோட்பாடும் எங்களிடம் உள்ளது.

ஆகவேதான்  பற்சிகிச்சை நிலையம் மற்றும்  கற்பிணி தாய்மார்களுக்கான சுகாதார மத்திய நிலையம்  போன்றவைகளை  அமைப்பதற்கான காணி கிடைக்காமல் நிதி திரும்பும் நிலையில்  அதற்கான காணி என்னால் வழங்கப்பட்டிருந்ததை  நீங்கள் யாவரும் அறீவீர்கள்.

மு.கா விழா அழைப்பில் எனது பெயர்...

இக்கட்டிடம் திறப்பதற்கு தனியாக அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு வைதிய அதிகாரிகளோடு  சேர்த்து எனது பெயரும்  சேர்க்கப்பட்டிருந்தால் அது நியாயம், ஆனால் மறைந்த தலைவர் அஸ்ரபின் பின் எமது சமூகத்தை அடமானம் வைத்து எமது சமூகத்தின் உரிமைகளையும் உடமைகளையும் இல்லாமல் ஒழிக்க எத்தனிக்கும் ஹகீமின் வங்குரோத்து அரசியலை  மக்கள் இன்று தூக்கி எறியும் நிலையிலும், அதாஉல்லா என்றொரு ஆளுமையின் தேவையை இன்று அனைத்து ஊர்களிலும் இளைஞர்களும், கல்விமான்களும், மக்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்து அவரின் பின்னால் அணிசேரும் இச்சந்தர்ப்பத்தில், அக்கரைப்பற்றில் இத்துபோய் காலாவதியாகி கொண்டிருக்கின்ற மு காங்கிரஸ் கட்சியின் விளம்பரத்துக்காக எனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது அனாகரீகமாகும்.  

இவ்வாறான செயற்பாடுகளில் நாங்களும் எங்களது இளைஞர்களும் ஒருபோதும் ஈடுபடமாட்டோம் என்பதனை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment