பிரதான செய்திகள்

முதலைக்கு இரையான பிரித்தானிய இளம் ஊடகவியலாளர் போல் மெக்ளீன் - அறுகம்பையில் சம்பவம்



அறுகம்பையில் விடுமுறையைக் கழிக்க வந்த, பிரித்தானிய இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் போல் மெக்ளீன் என்ற 24 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நண்பர்களுடன் அறுகம்பே பகுதிக்குச் சென்றிருந்த அவர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

மெக்ளீனின் உடலைத் தேடும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment