(எம்.எம்.ஜபீர்)
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலம் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டின் 04 கோடி ரூபாய் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அழைப்பின் பேரில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாலத்திற்கான அடிக்கல்லினை இன்று (15) நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் யு.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.முஸ்தபா, உயர் பீட உறுப்பினர் அஸீஸ், கமக்கார அமைப்புக்களின் பிரநிதிகள், விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அயராத முயற்சியின் பலனாக இவ்பிரதேச விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த இப்பாலத்தின் ஊடாக 5 விவசாய கண்டங்களிலுள்ள சுமார் 2ஆயிரம் ஏக்கர்களில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.
0 comments:
Post a Comment