(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2017ஆம் ஆண்டின் கடந்த அரை வருடத்திற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (15) வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. சமன் யட்டவர ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆளுமை,தோற்றம்,ஆரோக்கியம் என்பன மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரினால் பரிசோதிக்கப்பட்டது.
இங்கு பொலிஸ் பரிசோதனை மேற்படி விளையாட்டு மைதானத்திலும்; பொலிஸ் வாகனப் பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் நடைபெற்றன.
குறித்த பொலிஸ் பரிசோதனை மற்றும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தியத்திலுள்ள ஏனைய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,ஆண்,பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment