பிரதான செய்திகள்

கல்விக்கு கைகொடுப்போம் திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு மடி கணனி

ஹாஷிம் உமர் பௌண்டேசன் பல்வேறு சமூக சமயப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் வறிய மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்விக்கு கைகொடுப்போம் என்ற திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.


அதற்கிணங்க அதன் முதல் கட்ட விநியோகப் பணி கடந்த ஜூன் மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இரண்டாம்  கட்ட விநியோகம் இன்று ஜூலை 12 ஆம் திகதி  கொழும்பு கொள்ளுப்பிட்டி யிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்றது.


ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகருமான புரவலர் ஹாஷிம்  உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மடி கணனி பெற்றுக் கொள்வவதற்காக விண்ணப்பித்தவர்களுள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருக்கு புரவலர் ஹாஷிம் உமர் மடி கணினிகளை வழங்கி வைத்தார்.

 

இதன் போது செல்வன் ஜெ.ஏ.முஹம்மட் (வெல்லம்பிட்டி)இசெல்வன் அ.ஹம்தான்(கல்முனைக்குடி)இசெல்வி ஜே.சிவகுமார் (வெள்ளவத்தை)இ செல்வி எம்.ஐ.எம்.ராதியா (அம்பாறை சென்றல் கேம்ப்)இ செல்வி ஜே.ரி.பிரியதர்ஷினி (தெரணியகலை) ஆகியோர் மடி கணினிகளைப் பெற்றுக் கொண்டனர்.


ஹாஷிம்  உமர் பௌண்டேசனின் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஜெளபரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்இசிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தாஇ சமூகஜோதி ரபீக்இ தொழிலதிபர் வாஜித்இ இம்போட்மிரர் பிரதம ஆசிரியர் அமீர்இ உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத்இ மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.






 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment