கோரிக்கைகள் பலவற்றை முன்னிட்டு அரச சேவையின் 200க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அமைச்சுக்கள், வைத்தியசாலை, பாடசாலைகள், தபால், கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பொது அரச சேவையை பாதிக்கும் நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது சேவைகள் பல பாதிக்கப்படுமென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தபால், கிராம உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள், அலுவலக உதவி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள், சுகாதார சேவை உதவி அதிகாரிகள் உள்ளிட்ட அரச சேவையிலுள்ள தொழிற்சங்கங்கள் பல சுகயீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்கத்தற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அரச சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் தம்மிக்க முணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிபர் ஆசிரியர்கள் நாளைய தினம் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்கத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment