பிரதான செய்திகள்

சம்மாந்துறை மக்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இனியும் விடமுடியாது: பொறியியலாளர் UK நாபீர் தெரிவிப்பு

(அஷ்ரப்கான்)


சம்மாந்துறை மக்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது. நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகர், பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.


தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடும்போது,


கடந்த 30 வருட காலமாக எமது மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவு செய்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது. அதனால் எதிர்வரும். தேர்தல்களில் எமது நாபீர் பெளண்டேசனுக்கு அதிகாரம் வழங்கி அழகு பார்க்க மக்கள் தயாராகி வருகின்றனர்.  


எமது பிரதேசம், எமது சமூகம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் நிலை மாற்றப்பட வேண்டுமா? அதற்கு நாம் பல்வேறு திட்டங்களை முன்வைத்து களமிறங்க காத்திருக்கிறோம்.  அதனூடாக  பல்வேறு அபிவிருத்திகளையும்  உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எமக்குண்டு.


அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய திட்டங்களை நாம் வகுத்து வைத்திருக்கின்றோம். குறிப்பாக சம்மாந்துறை மக்கள் கடந்தகாலங்களில் விட்ட தவறுகளை இனியும் விட முடியாது. நமது கைகளை பலப்படுத்த அவர்கள் தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment