உலக உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் விவசாய திணைக்களத்தினால் மாமரம் மற்றும் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வும் அது தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கும் இன்று (11) அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் மாகாண விவசாய போதனாசிரியர் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களுக்கு பயிர் விதைகள், மாமரம் என்பன விவசாய போதனாசிரியரினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 comments:
Post a Comment