நோர்வேயின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் Cecilie Myrseth ஐ கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஒஸ்லோவில் சந்தித்தார்.
அமைச்சர் Cecilie Myrseth துடன் கலந்துரையாடல் மேற்கொண்ட செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணம் மற்றும் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
நோர்வேயின் உதவி எப்போதும் இலங்கைக்கு பக்க பலமாக இருந்துள்ளதாக தெரிவித்த செந்தில் தொண்டமான், இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆவது வருடத்தின் முதல் நினைவு முத்திரையையும் அமைச்சர் Cecilie Myrseth க்கு கையளித்தார்.

0 comments:
Post a Comment