தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக தனியொரு கட்சியால் தீர்மானிக்க முடியாதென, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலைய கட்டடத்தொகுதி திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒட்டுமொத்தமாக வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் இலங்கையிலுள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைத்தே தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக பேச வேண்டும்.
அதை விடுத்து மட்டக்களப்பில் நான்கு பேர் சேர்ந்து பொது வேட்பாளர்களை தீர்மானிக்கின்றனர்.

0 comments:
Post a Comment