மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மீரா பாலிகா தேசிய பாடசாலையில் அதிபர் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.அப்துல் ஜவாத் உள்ளிட்ட கல்வியாளர்கள், முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 102 மாணவிகள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.



0 comments:
Post a Comment