ஈஸ்டர், நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரைப் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை சிறப்பிக்கும் வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட ”தித்திக்கும் திருவிழா” நிகழ்வின் போது இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை
(06) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியும், நலன்புரிச் சங்கத்தின் பிரதித் தலைவருமான டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.நியாஸ், பொருளாளர் எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர். இதன்போது பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த தித்திக்கும் திருவிழா நிகழ்வின் போது பலூன் உடைத்தல், யோகட் சாப்பிடுதல், சங்கீத கதிரை, பூனைக்கு மணி கட்டுதல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments:
Post a Comment