(றியாஸ் ஆதம்)
சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம் ஏற்பாடு செய்த மே தினக்கூட்டம் புதன்கிழமை (01) அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது.
போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சீல் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று ஹல்வானி பேக்கரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.ஏ.எம்.சித்தீக் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சகலருக்கும் தென்னை மற்றும் கற்றாளை மரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.






0 comments:
Post a Comment